cinealive cinealive Author
Title: நயன்தாராவுக்காக மதம் மாறிய காதலர் : விக்னேஷ் சிவன் விக்டர் ஆனார்
Author: cinealive
Rating 5 of 5 Des:
நயன்தாராவுக்காக மதம் மாறிய காதலர் : விக்னேஷ் சிவன் விக்டர் ஆனார் தமிழ் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் , தனது காதலி நடிகை நய...
நயன்தாராவுக்காக மதம் மாறிய காதலர் : விக்னேஷ் சிவன் விக்டர் ஆனார்
1448360256-5062
தமிழ் பட இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நடிகை நயன் தாராவுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளதுநடிகை நயன்தாராவும், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள் என்பது பழைய செய்தி.



புதிய செய்தி, விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவிற்காக இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டார் என்பதுதான். ஏற்கனவே, நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு பிஎம்டபிள்யூ காரும், பெசண்ட் நகரில் வீடும் வாங்கிக் கொடுத்தார். மேலும் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இப்போது இருவரும் திருமணத்திற்கு தயாராகி விட்டார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் அதற்கு யாராவது ஒருவர் மதம் மாற வேண்டுமே!


                                                                  







ஏற்கனவே, இயக்குனர் பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா. அதன் பின் அந்த காதல் முறிந்ததும், மீண்டும் தனது தாய் மதத்திற்கே திரும்பினார். சமீபத்தில் ரோம் சென்று அங்கு போப்பை சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது நயன்தாராவுடன் சென்றிருந்த விக்னேஷ் சிவன், ரோமிலேயே கிருஸ்துவ மதத்துக்கு மாறி விட்டர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நயன்தாரா அவரின் பெயரையும் விக்டர் என்று மாற்றிவிட்டார்.

தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவனை எல்லோரும் விக்கி என்று அழைக்கிறார்கள். விக்டர் என்ற பெயரையும் சுருக்கமாக விக்கி என்று அழைக்கலாம். எனவே இந்த பெயர் அவருக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும் என்று நினைத்தாராம் நயன்தாரா. அதனாலேயே விக்னேஷ் சிவன் இப்போது விக்டர் ஆனார்.

முதலில் நடிகர் சிம்பு, அதன் பின், இயக்குனர் பிரபு தேவா என்று காதலித்து, பின் அதில் தோல்வியடைந்த நயன்தாராவுக்கு, விக்டர் என்கிற விக்னேஷ் சிவனுடனான உறவிலாவது சந்தோஷம் நிலைத்து நிற்கட்டும் என்று வாழ்த்துவோம்.

  

About Author

Advertisement

Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top