cinealive cinealive Author
Title: பொங்கல் தினத்தில் நயன்தாராவின் 2 படங்கள் ரிலீஸ்
Author: cinealive
Rating 5 of 5 Des:
பொங்கல் தினத்தில் நயன்தாராவின் 2 படங்கள் ரிலீஸ் பொங்கல் தின போட்டிக்கு பல படங்கள் தயாராகி வருகின்றன .
பொங்கல் தினத்தில் நயன்தாராவின் 2 படங்கள் ரிலீஸ்
பொங்கல் தின போட்டிக்கு பல படங்கள் தயாராகி வருகின்றன.



நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவாவுடன் நயன்தாரா நடித்துள்ளதிருநாள்படத்தை பொங்கல் தினத்தில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதில் ஜீவா பிளேடு கணேஷ் என்ற உள்ளூர் ரவுடியாக நடித்துள்ளார். அவரை காதலிக்கும் ஆசிரியையாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், மீனாட்சி, கோபிநாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.எஸ்.ராம்நாத் இந்த படத்தை இயக்குகிறார்.
 
இதுபோல் சிம்புவுடன் நயன்தாரா நடித்துள்ளஇது நம்ம ஆளுபடமும் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்களை கடந்து இந்த படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ளதாரை தப்பட்டையும் பொங்கலில் முழங்க இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும்ஒருநாள் கூத்துபடமும் பொங்கல் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது.










தனி ஒருவனுக்கு பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வர இருக்கும் படம்மிருதன்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படமும் பொங்கலுக்கு திரைக்கு வர காத்திருக்கிறதுவிஷால் நடிப்பில் திரைக்கு வர தயாராக உள்ளகதகளியும் பொங்கல் தினத்தில் களம் இறங்குகிறது.

பொங்கலுக்கு வர இருக்கும் படங்களில் இரண்டு நயன்தாரா நடிப்பில் வர இருப்பது அவர் காட்டில் மழை என்பதை காட்டுவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறதுஇதுபோல் பாண்டிராஜ் இயக்கத்திலும் பொங்கல் தினத்தில் 2 படங்கள் வர இருக்கின்றன.

 

About Author

Advertisement

Post a Comment

 
Top