cinealive cinealive Author
Title: தனுஷ் படத்தில் வித்யாபாலன்?
Author: cinealive
Rating 5 of 5 Des:
தனுஷ் படத்தில் வித்யாபாலன் ? தனுஷ் தற்போது ‘ விஐபி -2’ படத்தை முடித்துவிட்டு , பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ப...
தனுஷ் படத்தில் வித்யாபாலன்?
Are-Vidya-Balan-and-Dhanush-To-Do-a-Film
தனுஷ் தற்போதுவிஐபி-2’ படத்தை முடித்துவிட்டு, பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.




                                                               









பொலிடிக்கல் திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பல்வேறு முன்னணி நடிகைகளை பரிசீலித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் வித்யாபாலன் வில்லி வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடிக்காத வித்யாபாலன் இந்த படத்தின் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமாகவிருக்கிறார்.
தேசிய விருது கலைஞர்களான தனுஷும்வித்யாபாலனும் ஒரே படத்தில் இணைவது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார்.

 =============================

About Author

Advertisement

Post a Comment

 
Top